சூத்திரன் வேதம் படிக்கக்கூடாதா? (ஜெயஸ்ரீ சாரநாதன் ) – 1
12
திராவிடவாதிகள் பரப்பி வரும் பார்ப்பனக் கருத்துக்களுக்கு ஆதாரமில்லை என்பதைத் தொல்காப்பியச் சூத்திரம் மூலமாக கண்டோம். அதுபோல பார்ப்பனர்கள் மட்டுமே படிப்பாளிகளாக இருந்தார்கள் என்று பரப்பப்பட்டு வரும் கருத்தும் தவறு என்பதையும், யாரும், யாருக்கும் கல்வியை மறுக்கவில்லை என்பதையும் தமிழ்ச் சங்க நூல்கள் வாயிலாகவே பார்ப்போம்.
பார்ப்பனர்கள் கற்றலும், கற்பித்தலும் செய்தார்கள். அந்தக் கல்வி இரண்டு வகைப்பட்டது.
ஒன்று, வேதக் கல்வி, மற்றொன்று வேதம் ஒழிந்த கல்வி. அதாவது, வேதமோதுதல் அல்லாத பிற கல்வி என்று இரு வகைகளாக இருந்தன.
அந்தக் கல்வியை தமிழிலும் படிக்கலாம், சமஸ்க்ருதத்திலும் படிக்கலாம் என்று இருந்தது என்பதை ”அறுவகைப்பட்ட பார்ப்பன இயல்” என்று தொல்காப்பியர் சூத்திரமாக எழுதியிருக்கிறார். அவற்றுள் முதல் இரண்டு வகை வேதக் கல்வியாகும், கடைசி ஆறு வேதம் ஒழிந்த கல்வியாகும்.
பார்ப்பனர்கள் உட்பட அனைத்து வர்ணத்தவர்களும் அவரவர்கள் விருப்பம், முயற்சி, ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கல்வியைக் கற்றிருக்கிறார்கள்.
நான்காம் வர்ணத்தவர் எனப்படும் வேளாண் மக்களும் கல்வியைக் கற்றிருக்கிறார்கள். (நான்காம் வர்ணத்தவரைச் சூத்திரன் என்று தமிழில் சொல்லவில்லை. அவர்களை வேளாண் மக்கள் என்றே சொன்னார்கள்.)
வேளாண் மக்களுக்கான ஆறு தொழில்கள் என்று சொல்லும் தொல்காப்பியச் சூத்திரத்துக்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் ஆறில் ஒன்றாக இதைக் கூறுகிறார்.
உழவு – உழவொழிந்த தொழில் – விருந்தோம்பல் – பகடு புறந்தருதல் (ஏரைப் பாதுகாத்தல்) வழிபாடு – வேதம் ஒழிந்த கல்வி.
அரசர், வணிகர் ஆகியோருக்குச் சொல்கையில் ஓதல் என்று பொதுவாகச் சொல்கிறார். அந்த ஓதல் வேதக் கல்வியாகவும், இருக்கலாம், அல்லது வேதம் ஒழிந்த கல்வியாகவும் இருக்கலாம். ஆனால் வேளாண் மக்களுக்குக் குறிப்பாக வேதம் ஒழிந்த கல்வி என்று சொன்னதற்குக் காரணம் இருக்கிறது.
அவரவர் இயல்பு அடிப்படையில் வர்ணம் அமைகிறது. வேளாண் வகையின் முக்கிய இயல்பு பகடு புறந்தருதல் ஆகும். இந்த உலகமே வேளான் மக்களின் பகடு புறந்தரும் இயல்பை நம்பித்தான் இயங்குகிறது.
அப்படிப்பட்ட அவன் மண்ணிலும், சேற்றிலும் இறங்கி வேலை செய்யவும் வேண்டும், வேதக் கல்வி கற்றுக் கொள்ள வேண்டி பட்டினியும், விரதமும் இருந்து, வேளைக்கு ஒரு குளியலும் செய்து மந்திரம் ஓத வேண்டும் என்றால் எப்படி முடியும்?
வேதக் கல்வி விடியலுக்கு முன்னால் ஆரம்பிக்கும். வேளாண் வர்ணத்தவனும் விடியலுக்கு முன்னால் வயலுக்குச் செல்ல வேண்டும். அவன் வேதக் கல்வி படித்தான் என்றால் எதற்குச் செல்வான்? எதற்கு முன்னுரிமை தர முடியும்?
1
இந்த நேரப் பிரச்சினை அரசர், வணிகர் ஆகிய மீதமுள்ள வர்ணத்தவருக்குக் கிடையாது. அதனால் அவர்களுக்கு ஓதல் என்பதில் வேதக் கல்வியும், வேதம் ஒழிந்த கல்வியும் சேர்த்தே சொல்லப்பட்டது.
மேலும், வேளாண் மக்களை ஒரு சொத்தாகக் கருதினார்கள். தொல்காப்பியப் புறத்திணைச் சூத்திரங்களை விளக்கும் புறப்பொருள் வெண்பாமாலையில், பாலைக் குரிய வாகைத் திணையில், வேளாண் வகையைச் சொல்லும் சூத்திரம்165 –இல் ‘உழுவான் உலகுக்கு உயிர்’ என்று அந்த நான்காம் வர்ணத்தவரை உலகத்துக்கே உயிர் போன்றவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
திருவள்ளுவரும் அவர்களது சிறப்பைத் தனியாக விவரித்துள்ளார். எனினும் சிறப்புப்பாயிரத்தில், இந்த ஒரு வர்ணத்தவரைப் பற்றி மட்டுமே குறிப்பாகச் சிறப்பித்துச் சொல்லியுள்ளார். வேறு எந்த வர்ணத்தவரைப் பற்றியும் சொல்லவில்லை.
அறவாழி அந்தணன் என்று சொன்ன இடத்திலும் (கடவுள் வாழ்த்து 8), ஆண்டவனைத்தான் சொன்னாரே தவிர, அந்தண வர்ணத்தைச் சொல்ல்வில்லை. ஆனால் பகடு புறந்தருதல் என்னும் அந்த ஏரைக் காக்க வானம் பொழிய வேண்டும் என்று இந்த ஒரு வர்ணத்துக்கு மட்டுமே (வான் சிறப்பு -4) பாயிரத்தில் இடம் தந்துள்ளார்,
நான்காம் வர்ணத்தவர், உலகத்துக்கும், தாங்கள் வாழ்ந்த நாட்டுக்கும் ஆதாரமாகக் கருதப்பட்டார்கள். அரசர்கள் படையெடுத்து பிற நாட்டைக் கொண்டாலும், அந்தப் படையெடுப்பினால் அந்த நாட்டு வேளான் மக்களுக்கு ஒரு துன்பமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள். கழனிகள் பாதிப்படையாமல் பார்த்துக் கொண்டார்கள். இதைச் சொல்லும் ஒரு பாடல் புறநானூற்றில் இருக்கிறது.
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் செய்த செயல்கள் என்று வெள்ளைக் குடி நாகனார் சொல்பவற்றில் முத்தாய்ப்பாகச் சிறப்பித்துச் சொல்லப்படுவது ’பகடு புறந்தருநர் பாரமோம்பி’ என்பதேயாகும் (பு-நா-35)
அந்த அரசன் எத்தனையோ வெற்றிகளைப் பெற்றவன். ஆனால் அவையெல்லாம் பெரிதல்ல. அந்த அரசனை உலகம் தூற்றக்கூடிய காலமும் வரும். மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் போனாலும், விளைச்சல் குறைந்தாலும், இயல்பல்லாதன மக்கள் தொழிலில் தோன்றினாலும், உலகம் அரசனைத்தான் பழிக்கும். எனவே ஏரைப் பாதுகாப்பவரது குடியைப் பாதுகாத்து, அதனால் ஏனைய குடிகளையும் இந்த அரசன் பாதுகாக்கிறான் என்பதால், அவன் பகைவர்களும் அவனை வணங்குவர் என்கிறார் புலவர்.
2
இந்தச் செய்யுளையே தொல்காப்பியச் சூத்திரம் செய்யுளியல் 128 –க்கு விளக்கமாகக் கூறும் நச்சினார்க்கினியார், பகைவர் நாட்டை வென்றாலும், வெல்லப்பட்ட பகைவர்கள் இந்த அரசனைப் புகழ்வார்கள். ஏனெனெறால் வெல்லப்பட்ட நாட்டு வேளான் மக்களுக்கு இந்த அரசனால் எந்தத் துன்பமும் வராது. வென்ற நாட்டு கழனிகளுக்கும் எந்த அழிவும் வராது. ஏனெனில் வேளாண் மக்களைப் பாதுகாத்தால்தான், உணவும், செல்வமும் பெருகும். அதனால் மற்ற வர்ணத்தவரும் கவலையின்றி வாழ முடியும்.
இவ்வாறு சொல்லப்பட்டது கிள்ளி வளவனுடைய இயல்பு மட்டுமல்ல. இது தான் அரச வர்ணத்தின் ஐவகை மரபில் ஒன்று.
உலகத்துக்கு உயிராக விளங்கும் நான்காம் வர்ணத்தவருக்கு அவர்கள் செய்து வந்த தொழிலுக்குத் தலை வணங்கியே வேதக் கல்வி தேவையில்லை என்று வைத்தார்கள். காழ்ப்புணர்ச்சியாலோ, அடக்கு முறையாகவோ வேதக்கல்வியை மறுக்கவில்லை
நடைமுறைக்கு ஒத்து வராது (NOT PRACTICAL) என்றே அவ்வாறு வைத்தார்கள்.
ஆயினும், கல்வியே வேண்டாம் என்று சொல்லவில்லை, வேதம் ஒழிந்த கல்வி என்பதை ஒரு தொழிலாக வைத்தார்கள். அந்தக் கல்வி அவர்கள் கற்பனைக்கும், அறிவுக்கும் தீனி போடக் கூடியது. அதனால் அவர்கள் பாடும் ஏர்ப்பாட்டும், ஏற்றப்பாட்டும் அவர்கள் செய்யும் உழவின் சுமையைத் தவிர்க்கும்படி அமைந்தது.
இவையெல்லாம் மனுவாதி வர்ணாஸ்ரமத்தில், இந்த அளவுக்கு விரிவாகச் சொல்லப்படவில்லை.
மனுவாதியில் நான்காம் வர்ணமே முதலில் ஏற்படவில்லை. காலப்போக்கில் அது ஏற்பட்ட பிறகும், தமிழில் சொல்லியுள்ளது போல அத்தனை விரிவாகச் சொல்லவில்லை. ஆனால் தமிழ் மரபில் இந்த வர்ண விவரங்கள் இருந்து வந்தன என்பதுதான் உண்மை என்று பறை சாற்றும் வண்ணம், ‘என்மனார் புலவர்’ என்று நொடிக்கொரு தடவை தொல்காப்பியர் எழுதி, இந்தக் கருத்துக்களை வைத்துள்ளார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மக்கள் இயல்பையும், சூழ்நிலையையும் பொருத்து, அவற்றைக் கவனித்து, பெரியோர்கள் சொல்லி வந்ததை, வழி வழியாகக் கடை பிடித்து வந்தனர் என்பதே இந்த என்மனார் புலவர் என்று தொல்காப்பியர் கை காட்டி விடும் சங்கதியாகும்.
இனி நான்காம் வர்ணத்தவர் கல்வியைப் பெற்றார்கள் என்று காட்டும் சங்க நூல் ஆதாரங்களைப் பார்ப்போம்.
தமிழ் நிலங்களில் நாலாம் வர்ணத்தவரான வேளாண் மக்களை அடக்கியோ, ஒடுக்கியோ இழிவு படுத்தியோ நடத்தவில்லை என்பதற்குத் திருக்குறளின் உழவு அதிகாரமே சான்று. வேளாண் மக்களே அச்சாணி என்றும்,
உலகுக்குத் தலை போன்றவர்கள் என்றும் கருதப்பட்டனர்.
இவர்களே அரசர்களுக்குச்செல்வத்தைப் பெருக்கிக் கொடுத்தனர்.
இவர்கள் இல்லையென்றால் தவ முனிவர்கள் கூட தவித்து விடுவார்கள்.
இவர்கள்தான் உண்மையில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் என்று சொல்லக்கூடிய தகுதியுடன் இருப்பவர்கள்.
மற்றவர்கள் எல்லாம் ‘தொழுதுண்டு’ இவர்களுக்குப் பின் செல்பவர்கள் என்றெல்லாம் பலபடியாகத் திருக்குறள் கூறுவது, இந்த மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த உயர்வைப் பறை சாற்றுகிறது.
3
இவர்கள் யாரிடமும் கை நீட்டினதில்லை என்கிறது திருக்குறள்.
ஆனால் இவர்களிடம் மற்றவர்கள் கை நீட்டிப் பெற்றனர்.
அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் இருந்தனர் என்பது உண்மையே என்பதை
நச்சினார்க்கினியர் சொல்லும் நாலாம் வர்ணத்தவருக்கான ஆறு தொழில்களுள் ”விருந்தோம்பல்” ஒன்று என்பதன் மூலம் தெரிகிறது. (பகுதி-62)
வேறு எந்த வர்ணாத்தவருக்கும் விருந்தோம்பல் சொல்லப்படவில்லை.
ஆனால் நான்காம் வர்ணத்தவருக்கு மட்டும் அது சொல்லப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஒருவனுடைய பசியாற்றுகிற திறமை இந்த வர்ணத்தவருக்குத் தான் உண்டு. வீட்டுக்கு வருபவர்களுக்கு இல்லை என்று உணவு கொடுப்பவர்கள் இவர்கள். அப்படிப்பட்ட நிலையில் இருந்தார்கள் என்றால்
அவர்களை அடக்கப்படவேண்டியவர்கள் என்றோ, தாழ்த்தப்பட்டவர்கள் என்றோ இந்த வர்ண முறை அவர்களைப் பார்க்கவில்லை என்றே தெரிகிறது.
இந்தத் தமிழ் மண்ணில் அரசர்கள் கோலோச்சிய வரையிலும், அவர்களுக்கு நல்ல அந்தஸ்து இருந்தது. தமிழ் அரசர்கள் அடிக்கடி ஒருவர் மீது ஒருவர் படையெடுத்தாலும் அப்பொழுதெல்லாம், வேளான் மக்களையும் ,அவர்கள் உழும் வயல்களையும் அவர்கள் தொந்திரவு செய்ததில்லை வென்ற நாடுகளில் இருந்த மக்களையும், தங்கள் மக்களாக அரவணைத்து அவர்கள் மூலம் செல்வம் ஈட்டினர்.
4
ஆனால் அந்த நிலை ஒரு காலக்கட்டத்தில் மாறியது.
காபாற்ற வேண்டிய அரசன் காப்பாற்றவில்லை என்றால்
அப்பொழுது அவர்கள் வாழ்க்கை மாறி விடுகிறது.
அப்படிப்பட்ட காலம் எப்பொழுது, ஏன் எழுந்தது என்பதை நாம் படித்து தெரி்ந்து கொள்ளவேண்டும்.
என்றைக்குமே யாருக்குமே அரசர்கள்தான் புரவலர்களாக இருந்திருக்கிறார்கள்.
அந்த அரசர்கள் இயல்பு திரிந்த போது இந்த மக்களும் அவதியுற்றனர். இதற்கும்ப் பார்ப்பனனும் வர்ணமுறையும் காரணமில்லை.;
ஆட்சி நடத்தப்படும் விதமே இவர்கள் பெற்ற அவதிக்கு காரணமானது என்பதைப் புரிந்ததுக் கொள்ள, நம்மை ஆண்ட வெளிநாட்டாரை வைத்துச் சொல் முடியும். பாரதம் முழுவதும் இருந்த பல வேறு அரசர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர்.
ஆனால் வென்ற நாடுகளில் இருந்த வேளாண் மக்களையும், அவர்கள் செல்வமான கழனிகளையும் அழிக்கக் கூடாது என்பதை ஒரு தர்மமாகக் கொண்டிருந்தார்கள்.
அந்தத் தர்மம் படையெடுத்து வந்த முஸ்லீம் அரசர்களுக்கு இல்லை.
அவர்களுக்குப் பின் நம்மை அடிமைப் படுத்திய ஆங்கிலேயனுக்கும் இல்லை.
நம்மை அழித்து, நம் சொத்தைத் தங்கள் ஊருக்கோ,
அல்லது தங்கள் அரசர்களுக்கோ கொடுக்க வேண்டும் என்பதுதான்
அவர்களது தர்மமாக இருந்தது.
நம்மிடம் இருந்தவற்றை அபகரித்தவர்கள் அவர்கள். அதனால் பாதிப்புக்குள்ளான மக்களுக்குள் முக்கியமமானவர்கள் இந்த வேளாண் மக்கள். அந்த பாதிப்பின் காரணத்தை அறியாமல், பார்ப்பனர்களையும், வர்ண முறையையும் அதற்குக் காரணமாக்கும் திராவிடவாதம்,
அகில உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரான நொபோரு கராஷிமா அவர்கள், இந்த திராவிட இயக்கம் சமூக சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் இந்த இயக்கம் அறிவுக்கு புறம்பானதாகவே இருக்கிறது.
5
வேளாண் மக்களும், கல்வியும்.
வணங்கப் படத்தக்கவர்களான நாலாம் வர்ணத்தவர்களுக்கு, கல்வி மறுக்கப்படவில்லை. வேதமொழிந்த கல்வியை அவர்கள் படிக்க வேண்டும் என்பது அவர்களுக்கான ஆறு தொழில்களுக்குள் ஒன்றாக இருந்தது. அந்த கல்வி பெறுவதில் தடை இல்லை.
பழமொழி 116 –இல்
“ஆற்றவும் கற்றார் அறிவுடையார், அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை,
அந்நாடு வேற்று நாடாகா, தமவேயாம்”
அதனால் கல்லாமல் இருக்கக்கூடாது என்று சொல்லப்படுவதால், கல்வி கற்பதற்குத் தடை ஏதும் இருந்திருக்கவில்லை என்று தெரிகிறது..
இந்தப் பழமொழிச் செய்யுள் மூலம், கற்றவர் பல நாடுகளுக்கும் சென்றனர் என்றும்,
அப்படிச் சென்ற நாடுகளெல்லாம் அவர்களுக்கு வேற்று நாடுகள் போல இல்லை என்றும்,
அந்த நாடுகள் அவர்களை அரவணைத்துக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிகிறது.
அவர்கள் கற்ற கல்வி, இன்றைய திராவிடவாதிகள் சொல்வதைப் போல மொழிப் புலமை அல்ல. அதாவது தமிழன், தமிழை மட்டுமே வைத்துக் கொண்டு இதுமட்டுமே கல்வி என்று இருக்கவில்லை. வெறும் தமிழ் மொழிப் புலமை மட்டுமே இருந்திருந்தால், அவர்களால் வெளி இடங்களுக்குச் சென்று அங்கு தங்களை இன்றியமையாதவர்களாக நிலை நாட்டிக் கொண்டிருக்க முடியாது.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று சொல்லியிருப்பதால்
அறிவு சார்ந்த கல்வியாகவும்,
வாழ்கை முறை, தர்ம நிலை ஆகியவற்றைப் புகட்டும் கல்வியாகவும்
இருந்திருக்க வேண்டும்.
அதனால் அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் சிறப்பு அடைந்திருக்கிறார்கள்.
அறு வகைப்ப்பட்டப் பார்ப்பியலில் நான்கு வகைகள் இப்படிப்பட்ட கல்வியையும், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிப் புலமையையும் தருபவை. அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டே அவர்கள் பெருமை பெற்றிருக்க முடியும்.
ஆனால் இவை எல்லாம் பொருள் ஈட்டும் முறையைச் சொல்லித் தரும் கல்வி அல்ல.
பொருள் ஈட்டுவதற்கு, நாலாம் வர்ணத்தவருக்கு உழவு இருந்தது. மூன்றாம் வர்ணத்தவருக்கு வாணிகம் இருந்தது. அரசர்களுக்கு ஐந்து வகை இருந்தது. ஐவகை மரபின் அரசியல் பக்கம் என்று தொல்காப்பியர் சொல்லுவது பின் வரும் ஐந்து வகைகளில் பொருள் சேர்ப்பதே என்று நச்சிநார்கினியர் சொல்கிறார்.
(1) சுங்கம், வரி போன்ற வழிகள் மூலம் பொருளைப் பெருக்குதல்,
(2) பகைவனை வென்று அவன் நாட்டிலிருக்கும் செல்வத்தை அடைதல்,
(3) வாரிசு இல்லாமல் ஒருவர் இறந்து விட்டால், அவரது செல்வத்தைப் பெறுதல்,
(4) பொருள் இல்லாத காலத்தில் வாணிபம் செய்து பொருள் தேடல்,
(5) அறத்தில் திரிந்தாரைத் தண்டிக்கும் விதமாக அவரது பொருளைப் பெறுதல்
நான்கு வர்ணத்தவர்களில் பார்ப்பனர்களுக்குப் பொருள் சேர்க்கும் முறை சொல்லப்படவில்லை. மாணவர்கள் தருவதையும், தானமாகப் பெருவதையும் வைத்துக் கொண்டே அவர்கள் வாழ்க்கை நடத்தினார்கள்.
அந்தப் பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்த கல்வி பொருளாதாரக் கல்வி அல்ல. அது அறக்கல்வியாகும்.
அந்தக் கல்வியை நான்காம் வர்ணத்தவர்கள் பெற வேண்டும் என்பது அவர்களுக்கான வர்ண விதியான ஆறு தொழில்களில் ஒன்று.
அந்தக் கல்வி அவர்களுக்குப் பொருள் ஈட்டும் முறையைச் சொல்லித்தரவில்லை.
ஆனால் அந்தக் கல்வி அறிவைக் கண்டு பிறர் இவர்களுக்குப் பொருள் தந்தனர்.
எங்கோ கிராமப்புறத்தில் இருக்கும் பாணர்கள் அப்படிப்பட்ட கல்வியால் பெற்ற கவி இயற்றும் திறமையால் அரசர்களிடடமிருந்து பொருள் ஈட்டினர். எந்த அரசன் வாரிக்கொடுக்கும் வள்ளலாக இருந்தானோ, அவனைத் தேடி நாடு விட்டு நாடு சென்று, பாடிப் பரிசில்கள் பெற்றிருக்கின்றனர்.
அப்படி அவர்கள் பாடின பாடல்களில், உலக அறிவும், அறநூல்கள் அறிவும் மிகுந்து இருப்பதைச் சங்க நூல்கள் மூலமாக நாம் தெரிந்து கொள்கிறோம்.
(தொடரும்)
சூத்திரன் வேதம் படிக்கக்கூடாதா? (ஜெயஸ்ரீ சாரநாதன் ) – 2
வேதமொழிந்த கல்வி.
ஆறு பார்ப்பியலில், 4 வகைகளில் வரும் வேதமொழிந்த கல்வி என்பது, அறநூல்கள் சொல்லும் அறக் கல்வி ஆகும்.
அந்தணர்கள் மற்ற வர்ணத்தவருடன் போட்டிக்கு வந்ததில்லை.. அப்படியே போட்டியிட்டுருந்தால், சங்க நூல்களில் அந்தணர்கள் ஆதிக்கமே அதிகமாக இருந்திருக்கும்
ஆனால் சங்க நூல்களில் அந்தணர்கள் எழுதிய பாடல்கள் குறைவு. அவர்கள் வேதம் ஓதுதலிலும், கற்பித்தலுமே காலத்தைக் கழித்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவர்கள், தங்கள் பெயரை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்களுக்கு ஒரு ஏணியாகத்தான் தமிழைப் பார்ப்பனன் இருந்திருக்கிறான்.
அற வழிக் கல்வி என்பது அறம், பொருள், இன்பம் என்னும் புருஷார்த்தங்களைக் கொண்டது..
அறம், பொருள், இன்பம் என்றால் என்ன?
ஒருவன் நடந்து கொள்ளும் விதம் அறவழியில் இருக்க வேண்டும்.
பொருள் ஈட்டுவது அறவழியில் இருக்க வேண்டும்.
இன்பம் நுகர்வதும் அறவழியில் இருக்க வேண்டும்,
இப்படி இருந்தால் வீடு பேறு கிடைக்கும்.
அதனால் அறம், பொருள் இன்பத்தை ஒருவன் ஒழுகாகப் பேண வேண்டும்.
இது வேதக் கருத்து.
இதுவே திருக்குறள் முதல் புறநானூறு உள்ளிட்ட அனைத்து சங்க நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் புறநானூறு என்பதே அறநிலை, பொருள்நிலை, இன்ப நிலை என்று மூன்று பகுதிகளாக இருந்திருக்க வேண்டும் என்பது டா.உ.வே.சா அவர்களது கருத்து. ,
ஆகவே அறம், பொருள், இன்பம் என்னும் வேத மதக் கருத்தே, தமிழர் பண்பாட்டுக் கருத்து ஆகும். அதை மனுவாதிகளும் பின்பற்றினார்கள் என்பதால், தமிழன் அதை வட இந்தியாவில் புகுத்தினான் என்று சொல்வது சரியல்ல என்பது போலவே, மனுவும் தமிழ் மக்கள் மீது அதைத் திணித்தான் என்று சொல்லுவதும் சரியல்ல.வேதத்தை எல்லோரும் பேணி வந்தனர். அதனால் அது தரும் வாழ்க்கையியலும் இமையமலை முதல் தென் குமரி வரை பொதுவாக இருந்திருக்கிறது.
அதைத்தான் கல்வியாகத் தமிழன் கற்றான் என்று தொல்காப்பியம் சொல்கிறது.
அது நான்காம் வர்ணத்தவருக்கு மறுக்கப்படவில்லை என்பதற்கு ஒரு சான்று புறநானூற்றில் இருக்கிறது.
”வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன் கட்படுமே” (பு–நா-183)
அதாவது நான்கு பால் என்று நான்கு வர்ணங்கள் இருந்திருக்கின்றன.
அவற்றுள் மேல்பால், கீழ்ப்பால் என்பது மேலிலிருந்து கீழாக எண்ணுவதால் ஏற்படுவது. கீழ்ப்பால் என்னும் நான்காவது பாலைச் சேர்ந்த ஒருவன் கல்வியில் தேர்ச்சி பெற்றால் அவனிடம், மேற்பாலாக உள்ள முதல் மூன்று வர்ணங்கள் ஒன்றில் பிறந்தவனாக இருந்தாலும், ஒருவன் தலை வணங்கி அவன் சொன்னதற்குக் கட்டுப்படுவான்.
இதில் குதர்க்கம் கண்டுபிடிப்பவர்கள், கீழ்ப்பால் ஒருவன் கற்பின்’ என்று ஒருவன் கற்றுக் கொண்டால் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே அத்தி பூத்தாற்போல ஏதோ சிலரே கற்றிருக்க வேண்டும் என்று சொல்லலாம். அது சரியல்ல என்று தெரிந்து கொள்ள அந்தப் பாடல் சொல்லும் கருத்து முழுவதையும் தெரிந்து கொள்வது நல்லது.
அந்தப் பாடல், கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதற்காக ஒரே வகையில் உள்ளவர்களுக்குள் கல்வியால் பேதம் ஏற்படும் என்று உதாரணங்களைச் சொல்கிறது.
அப்படிச் சொல்வது – ஒரே தாய் வயிற்றில் பிறந்தாலும், கல்வி கற்ற மகனிடம் அந்தத் தாய்க்கும் மனம் செல்லும்.
அது போல ஒரே குடியில் பலர் பிறந்திருந்தாலும், அவர்களுள் மூத்தவனை வருக வருக என்று அழைக்காமல், இளையவனாக இருந்தாலும், கற்றவன் எவனோ அவன் பின்னால் அரசனும் செல்வான்.
அதே போல வேற்றுமைகள் இருக்கும் நான்கு வர்ணத்தவர்களில், கடைசி வர்ணத்தவன் கற்றவன் என்றால், அவனுக்கு முன்னால் இருக்கும் மூன்று வர்ணதவர்களும் அவனிடம் கட்டுப்படுவார்கள்.
இந்தக் காரணங்களினால், உதவி செய்தோ, பொருள் கொடுத்தோ எப்படியாவது கல்வி கற்க வேண்டும் என்கிறது இந்தச் செய்யுள்.
இதில் வேற்றுமை தெரிந்த நாற்பால் என்று சொல்லி, அவர்களுள் கீழ்ப்பால் கல்வி கற்றலைப் பற்றிச் சொல்லவே, அந்த வேற்றுமை என்பது கல்வியினால் ஏற்பட்ட வேற்றுமை அல்ல என்பது தெளிவாகிறது. பிற வழிகளில் அந்த வேற்றுமை இருந்திருக்கிறது. அந்த வேற்றுமைகள் கல்வி கற்பதற்குத் தடையாக இல்லை என்றும் தெளிவாகிறது.
இந்தச் செய்யுளை எழுதியவர் ஒரு பாண்டிய அரசர் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதுவும் ஆரியபடைகடந்த நெடுஞ்செழியன் ஆவார்.
இந்த அரசன், கோவலன் சாவுக்குக் காரணமாகி, தான் தவறு செய்து விட்டோம் என்று தெரிந்த கணமே அரியணையில் உயிரை விட்ட நெடுஞ்செழியனாவான் என்பதை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தின் இறுதியில் தெரிந்து கொள்ளலாம்.
8
அவன் ஆரிய வர்த்தம் என்று விந்திய மலைக்கு வடக்கே இருந்த இடங்களுக்குச் சென்று அங்கிருந்த அரசர்களை வென்றிருக்கிறான் என்பதை ஆரியப்படை கடந்தவன் என்ற சிறப்புப் பெயர் மூலம் தெரிந்துக் கொள்கிறோம்.
வெறுக்கப்பட வேண்டியது ஆரியம் என்றால், ஆரியர்களே, தமிழர்கள் மீது மனுவாதித் திணிப்ப செய்தனர் என்று இந்தத் திராவிடவாதிகள் சொல்வது உண்மை என்றால், ஆரியப் படைகளை வென்ற அந்த அரசன், அந்த மனுவாதி வர்ணாஸ்ரமத்தைத் தன் நாட்டிலிருந்து விரட்டியிருக்கலாமே?
அப்படிச் செய்யாமல், வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் என்று ஏன் செய்யுள் இயற்றிக் கொண்டிருக்க வேண்டும்?
அந்த வர்ணப்பகுப்பு, தமிழ் மக்களிடையே இயல்பாக இருந்திருக்கவேதானே அவன் அதைத் தவறாகவோ, அல்லது ஆரியத்திணிப்பு என்றோ கருதவில்லை.?
பிச்சை எடுத்தாவது கல்வி கற்க வேண்டும் என்று அனைத்து மக்களும் கல்வி கற்க வேண்டும் என்று அந்நாளில் சொன்னதற்குக் காரணாம், கல்வியானது ஒழுக்கத்தைத் தரும் என்பதால்தான்
ஒழுக்க சீலனான எந்த வர்ணத்தவராக ஒருவர் இருந்தாலும் அவருக்கு மரியாதை இருந்தது. அவர் சொல்லுக்கு மரியாதை இருந்தது.
அப்படி ஒழுக்க நெறியில் ஒருவன் இருந்தால் அதுவே உயர் குடிப் பிறப்பு எனப்பட்டது. குடி என்பத வர்ணத்தில் வரவில்லை. எந்த வர்ணத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், நன்னெறியும், ஒழுக்கமும் கொண்டிருந்தால் அவன் உயர்ந்த குடியினன் என்று சொல்லப்பட்டான். நாலடியாரிலும், திருக்குறளிலும் வேண்டிய அளவுக்கு இவற்றை விவரித்துள்ளார்கள். குடிப்பிறந்தார் குன்றா ஒழுக்கங் கொண்டார் என்னும் நாலடியார் (குடிப்கிறப்பு-4) செய்யுள். இந்த உயர் குடி என்பது ஒழுக்கத்தால் வருவது, வர்ணத்தால் வருவதல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது.
ஒருவனுக்கு ஒழுக்கம் இல்லை என்றால் அதற்காக அவன் வர்ணத்தைக் குறை சொல்லவில்லை. ஒழுக்கமில்லை என்றால் அவன் கயவன் எனப்படுவான். மேலே மேற்கோளிட்ட அந்தச் செய்யுள் இதைச் சொல்கிறது. ஒழுக்கமுடையவர் உயர் குடிப்பிறந்தோர் எனப்படுவர். ஒழுக்கமில்லாதவர் கயவராவார்.
அந்த ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிற கல்வி, ஆறு வகைப் பார்ப்பியலில் வருகிற வேதமொழிந்த கல்வி. தர்ம நூல்களும், ராமாயணமும், மஹாபாரதமும், புராணங்களும் தான் அந்த ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கின்றன. அந்தக் கல்வியைக் கற்றவனைத் தலை வணங்கி இருக்கிறார்கள்.
அவன் நான்மறை தெரிந்த பார்ப்பனனாக இருந்தால், அரசர் முதல் பிற வர்ணத்தவர்கள் தலை வணங்கியிருக்கிறார்கள்.
கற்றறிந்த நாலாம் வர்ணத்தவனாக இருந்தாலும், அவனுக்கு பார்ப்பனர், அரசர் முதல் அனைவரும் தலை வணங்கியிருக்கிறார்கள்.
அந்தக் கல்வி கற்றவர்களுக்குத்தான் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றிருக்கிறார்கள். மனுவாதி சூத்திரனாக இருக்கட்டும், சாகத்தீவின் மந்தக சூத்திரனாக இருக்கட்டும், அவர்களைப் பற்றியச் சொல்லுமிடத்தே, அவரவர்கள் தர்ம நெறியில் நின்று சிறக்க வாழ்ந்தார்கள் என்றே சொல்லப்பட்டுள்ளது. அது போலவே தமிழக வேளாண் மக்களும் தர்ம நெறியில் நின்று உயர் குடியினராக மதிக்கப்பட்டு இருந்தார்கள். இந்தக் கருத்தை திருக்குறள் குடியையில் உரையில் பரிமேலழகர் சொல்வதைக் காணலாம்.
புலன் அழுக்கற்ற அந்தணன்’ என்று கபிலரை, மாறோக்கத்து நப்பசலையார் சொல்லியுள்ளார். புலன் அழுக்கில்லாமை என்பது அந்தணனுக்கு மட்டுமல்ல, அன்றைய அறக் கல்வியைக் கற்ற எவருக்குமே வரக்கூடியது.
இன்றைக்குத் திராவிடம் பேசும் திராவிடவாதிகளுக்கு அது இருக்கிறதா?
அறக்கல்வி கற்காமலும், அறக்கல்வியை மதிக்காமலும் இருக்கிற இந்தத் திராவிடவாதிகள், அன்றைய தமிழ் நிலங்களில் இருந்திருந்தால் ’கயவர்கள்’ என்று ஒதுக்கப்பட்டிருப்பார்கள்.
சங்க நூல்களில் பிற வர்ணத்தவர் ஆதிக்கம்.
மற்ற வர்ணத்தவர்கள், அந்தணர்களிடமிருந்து கல்வி கற்றார்கள்.
கற்ற கல்வியை வெளிப்படுத்தவும் செய்தார்கள்.
அப்படி வெளிப்படுத்திக் கொள்வதிலும்,
அந்தணர்கள் மற்ற வர்ணத்தவருடன் போட்டிக்கு வந்ததில்லை.
அப்படிப் போட்டியிட்டிருந்தால்,
சங்க நூல்களில் அந்தணர்கள் ஆதிக்கமே அதிகமாக இருந்திருக்கும்.
ஆனால் சங்க நூல்களில் அந்தணர்கள் எழுதிய பாடல்கள் குறைவு.
அவர்கள் வேதம் ஓதுதலிலும், கற்பித்தலுமே காலத்தைக் கழித்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவர்கள்,
தங்கள் பெயரை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
மற்றவர்களுக்கு ஒரு ஏணியாகத்தான் தமிழ்ப் பார்ப்பனன் இருந்திருக்கிறான்.
உதாரணத்துக்குப் புறநானூறை எடுத்துக் கொண்டால்,
அதில் அந்தணர்கள் எழுதிய செய்யுள்கள் குறைவு.
அரசர்களும், வணிகர்களும் வேளாண் மக்களும் எழுதிய பாடல்களே அதிகம்.
பிற சங்க நூல்களிலும் கடை இரண்டு வர்ணத்தவரே
அதிக செய்யுள்கள் இயற்றியுள்ளனர்.
குறுந்தொகையை மட்டும் எடுத்துக் கொண்டால்,
‘ஆசிரியன் பெருங்கண்ணனார்’என்று ஆசிரியர் பட்டத்துடன் ஒருவரும்,
‘மதுரை ஆசிரியர் கோடங் கொற்றனார்’என்ற ஒருவரும் என இருவரே
ஆசிரியர் என்ற பெயருடன் இருக்கின்றனர். பொதுவாகக் கற்பித்தலைப் பார்ப்பனர்கள் செய்யவே, இவர்கள் பார்ப்பனர்களாக இருக்கக்கூடும்.
குறுந்தொகைப் பாடல்களை எழுதியவர்களில் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்று பிற வர்ணத்தவரே அதிகம் இருக்கிறார்கள்.
அவர்களில்கொல்லர்கள் இருவர்.
அவர்களது பெயர்கள்,மதுரைக் கொல்லன் புல்லன் (373),
மதுரைப் பெருங்கொல்லர்(141)
வணிக வர்ணத்தைச் சேர்ந்தவர்,’மதுரை அறுவை வணிகன் இளவேட்டனார்’. அறுவை என்றால் ஆடை என்று பொருள். இவர் துணி வியாபாரியாக இருக்க வேண்டும்.
‘மதுரை எழுத்தாளர் சேந்தம் பூதனார்’என்பவர் எழுத்தாளர் பணியில் இருந்திருக்க வேண்டும்.
‘மதுரை வேளா தத்தர்’என்றும் ஒரு புலவர் இருந்திருக்கிறார். இவர் வேளாண் மரபைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
‘மிளை வேள் தித்தனார்’என்னும் பெயர் கொண்ட புலவரும் வேளாண் தொழில் செய்தவராக இருக்க வேண்டும்.
’வாயிலான் தேவனார்’என்றும், ‘வாயிளங் கண்ணனார்’ என்றும் பெயர் கொண்ட புலவர்கள் வாயில் காப்போனாக இருந்திருக்க வேண்டும். அவரவர் செய்த தொழிலைக் கொண்டும் பெயர் வைத்திருக்கின்றனர். வாயில் காக்கும் தொழில் கீழ்மையானது என்று எண்ணப்படவில்லை. எல்லாத் தொழில்களுக்கும் மரியாதை இருந்தது.
வண்ணக்கன் என்ற பெயரில் இரண்டு புலவர்கள் குறுந்தொகையில் எழுதி உள்ளார்கள். வண்ணக்கன் என்றால் நாணய பரிசோதகர் என்று பொருள். அந்த நாளில் வேறு பட்ட வேலைகள் இருந்திருக்கின்றன. அவற்றைச் செய்ய விசேஷ திறமைகளைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
வாத்தியக் கருவிகள் வாசித்தவர்களும் செய்யுள் இயற்றியுள்ளார்கள். ‘நெடும் பல்லியத்தனார்’, ‘நெடும் பல்லியத்தை’ என்ற பெயர்களில் இரண்டு புலவர்களது பாடல்கள் குறுந்தொகையில் காணப்படுகின்றன. பல்லியத்தை என்றும் அடை மொழி, பல வாதியங்களை உடையவர்களுக்கு அளிக்கப்படுவது.
வாத்தியம் இசைத்தவர்களைப் போல கூத்தர்களும் பாடல்கள் எழுதி உள்ளனர்.’வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்’ என்பவரது பெயர் அவர் கூத்தாடுபவர் என்பதைக் காட்டுகிறது.
செய்யும் தொழில், ஆர்வம் என வகை வகையாக இருந்தாலும், இவர்கள் அனைவரும் வேதமொழிந்த கல்வியாக, முதல், இடை, கடை என இலக்கண, இலக்கியம், தர்ம நூல் போன்றவற்றைப் பயின்று இருந்தால்தான் திணை, துறை சுத்தமாகச் செய்யுள் இயற்றி இருக்க முடியும்
குலபதி என்ற அடைமொழியுடன் ‘கிடங்கிற் குலபதி நக்கண்ணனார்’ என்ற புலவர் இருந்திருக்கிறார். ஆயிரம் மாணவர்களை ஆதரித்துக் கல்வி புகட்டுபவருக்குக் குலபதி என்ற பட்டம் கொடுப்பார்கள். கல்விக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்திருந்தால், இப்படி ஒரு வழக்கம் வந்திருக்கும்? இப்படி ஒரு பட்டம் வழங்கும் வழக்கம் இருந்துள்ளதால், ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படித்தனர் என்பதும் தெரிகிறது.
வர்ண மக்களை விடுங்கள். ஒரு ஆரிய அரசன் எழுதிய பாடல் குறுந்தொகையில் இருக்கிறது.
ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன் என்பது இவன் பெயர். (கு–தொ-184). இந்த அரசனுக்குக் கபிலர் தமிழ் கற்றுக் கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது. அதற்காக அவர் இயற்றியதே ‘குறிஞ்சிக் கலி’ என்றும் சொல்லப்படுகிறது. ஆரியத் திணிப்பு நடந்தது என்று திராவிடவாதிகள் கூறுகிறார்களே, இதற்கு என்ன சொல்கிறார்கள், விரட்டியடித்தவனும், தினித்தவனுமாக ஆரியர்கள் இருந்திருந்தால். இந்த ஆரிய அரசன் எழுதிய பாடல் குறுந்தொகையில் எப்படி இடம் பெற்றிருக்கும்?
குறுந்தொகையில் உள்ள பிற பெயர்களைப் பாருங்கள். அவை வடபால் முனிவர்கள் பெயராக இருக்கின்றன.
கடம்பனூர்ச் சாண்டில்யன் என்ற ஒரு புலவர் எழுதிய பாடல் இருக்கிறது (307)
யார் இந்தச் சாண்டில்யன்? ஒரு ரிஷியா? சாண்டில்ய கோத்திரத்தில் வந்தவரா? அல்லது இந்தப் பெயரைக் கொண்ட வடபால் புலவர் ஒருவரா? ஆனால் அவருக்குத் தமிழ் தெரிந்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்வோம். தமிழ்ப் புலமை இருந்திருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்வோம்.
இன்னொரு புலவர்.இவர் பெயர் கருவூர்ப் பவுத்திரனார் (குறுந்தொகை – 162)
இந்தப் பெயர் பவித்திரம் அல்லது பேரன் என்ற பொருள் கொண்ட பௌத்திரன் என்னும் வட சொல்லாகும். ஆனால் அவரது ஊர்ப் பெயரோ கருவூர் என்பது. தமிழும், சமஸ்க்ருதமும், சங்க காலம் வரை உறவாடியது என்பதற்கு இதை விட வேறு சாட்சி என்ன வேண்டும்?
இந்தப் பெயரைப் பாருங்கள்.’கருவூர் ஓத ஞானி’. (கு–தொ – 71) ஓத ஞானி என்பது சமஸ்க்ருதப் பெயர். பரந்த ஞானம் என்பது இதற்குப் பொருள். வெறும் ஓத ஞானி என்னும் பெயரிலும் ஒருவர் எழுதியுள்ளார்.
இன்னொரு புலவர்‘நெய்தல் கார்க்கியர்’ எனப்பட்டார். (கு –தொ 212)
இவர் நெய்தல் நிலத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் கார்க கோத்திரத்தைச் சேர்ந்தவரா, கார்க ரிஷியின் வம்சமா, அல்லது கார்க்கி என்னும் பெண்பால் ரிஷியின் வழி வந்தவரா? அல்லது வட புலத்திலிருந்து தமிழ் நாட்டு நெய்தல் நிலத்துக்கு வந்து தவ வாழ்க்கை மேற்கொண்டவரா? இவர் எழுதிய இரண்டு பாடல்களிலும், நெய்தல் நில வாழ்க்கையும், தலைவன் மணியொலிக்கத் தேரிலேறி கடற்கரைக்கு வரும் காட்சியும் சொல்லப்படுகின்றன. கடற்கரையோரம் தவ வாழ்க்கையை மேற்கொண்ட வடபால் தவ முனியரோ இவர் என்று எண்ணும் வண்ணம் இவர் தாம் பார்த்த காட்சிகளை விவரிக்கும் பாங்கு அமைந்திருக்கிறது.
இன்னொரு பெயரும் இருக்கிறது.அது ‘தேவ குலத்தார் ”குறுந்தொயையின் 3 ஆவது பாடல் இவரால் இயற்றப்பட்டது. தேவன் என்னும் பெயரில் பாரதம் பாடிய பெருந்தேவனாரும் இருக்கிறார். தமிழ் மக்களின் வாழ்க்கை வேத மரபின் அடிப்படையில் இல்லையென்றால், இப்படிப் பட்ட பெயர்கள் வரமுடியாது.
வேத மரபின் அடிப்படை என்பது மட்டுமல்ல, வடக்கு, தெற்கு வித்தியாசம் இல்லாமல் ஒரு கலந்துறவாடல் நடந்திருக்கிறது. தமிழும், சமஸக்கிரதமும், தமிழ் நாட்டவரும் அறிந்திருந்தனர், வட நாட்டவரும் அறிந்திருந்தனர் என்பதை நச்சினார்க்கினியர் தெரிவித்துள்ளார்.
தொல்காப்பிய வர்ண சூத்திரத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியார் ’தமிழில் தலை ஓதல்” என்பது பற்றிச் சொல்லும் விவரம் இதை நிலை நிறுத்துகிறது.
அவர் சொல்கிறார்:-
“தமிழ்ச் செய்யுட் கண்ணும் இறையனாரும்,
அகத்தியனாரும்,
மார்க்கண்டேயனாரும்,
வான்மீகனாரும்,
கவுதமனாரும் போலார் செய்தன தலை”.
என்கிறாரே இவர் சொல்லும் இந்தப் பெயர்கள் எல்லாம் தமிழ்ப் பெயர்களா?
இந்தப்பெயர்களில் இறையனார் என்பது சிவ பெருமானைக் குறிக்கும்.
அகத்தியனார், நமக்கு மிகவும் அறிமுகமானவர். ஆனால் அவர் வடபால் முனிவர்தான்.
9
அவரது மனைவி லோப முத்திரை என்பவள் உத்தர குருவைச் சேர்ந்தவள் என்று ஒரு கருத்து இருக்கிறது. ரிக் வேதத்தில் ஒரு பாடல் அவளால் இயற்றப்பட்டது. ராவணனைப் போரில் வெல்ல, ராமனுக்கு அகஸ்தியர் சமஸ்க்ருதத்தில் ஆதித்தியஹ்ருதயம் என்னும் பாடலை உபதேசித்துள்ளார். அவரே தமிழுக்கும் ஆசான் என்பது நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்து மார்க்கண்டேயரைப் பற்றி நச்சினார்க்கினியர் சொல்லியுள்ளாரே, இவரும் சமஸ்க்ருதத்தில் புராணம் தந்துள்ளார்.
10
சிவபெருமானது அருளால் சாவை வென்று என்றும் பதினாறாக, சிரஞ்சீவியாக இருப்பவர் என்று சொல்லப்படும் மார்க்கண்டேயர் தமிழில் எழுதியுள்ளார் என்பது தெரிகிறது ஆனால் தமிழ்க் கல்வியில் அவர் தந்துள்ள நூல்களைப் படிக்க வேண்டும் என்கிறாரே அது எப்படி? தமிழ் இலக்கிய, இலக்கணத்தில் மார்க்கண்டேயர் எழுதிய நூல்கள் இருந்தன என்றுதானே அர்தமாகிறது.
அடுத்து, கவுதமனார் என்ற பெயரைப் பாருங்கள். பாலை பாடிய கவுதமனார் என்று ஒருவர் இருந்தார். பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தைப் பாடியவரும் ஒரு கவுதமனார். இருவரும் ஒருவரே என்று சில ஏடுகளில் குறிக்கப்பட்டுள்ளது என்கிறார் டா. உ.வே.சா அவர்கள். இந்தக் கவுதமனார் ஒரு பார்ப்பனர். அவரும் அவரது மனைவியும் சுவர்கம் செல்ல வேண்டும் என்று ஒரு யாகம் செய்ய விரும்பினர். அந்த யாகத்தைச் செய்யச் சேர மன்னன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் உதவினான். இந்தக் கவுதமனாரைத்தான் நச்சினார்க்கினியர் சொல்லியிருக்க வேண்டும். இவர் கவுதம கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். அந்தக் கோத்திரம் அவரை ஆரிய வர்த்த ரிஷிகள் மரபில் வைக்கிறது. அந்த மரபில் வந்த இவர் தமிழின் தலை ஓதலுக்கான இலக்கண இலக்கியம் படைத்தவர் என்பது, வடக்கு- தெற்கு என்ற வித்தியாசம் அன்று இல்லை என்பதையும், தமிழையும், சமஸ்க்ருதத்தையும் இன்றியமையாத இரு கண்களாக அறிஞர்கள் பார்த்தார்கள் என்பதையும் தெரிவிக்கிறது.
அதுபோல வான்மீகனார் என்கிறாரே? அவர் யார்? ராமாயணம் எழுதிய வால்மீகியா? வான்மீகம் என்பது ஒரு சமஸ்க்ருதச் சொல்தான். கரையான் புற்றுக்கு வால்மீகம் என்று பெயர்.
11
அவர் தியானத்தில் அமர்ந்த பொழுது அவர் மீது கரையான் புற்று கட்டி விடவே அவர் இந்தப் பெயர் பெற்றார். எனவே இது காரணப்பெயர். இந்தப் பெயரில் வேறு ஒருவர் இருக்க வாய்ப்பில்லை.
ஆனால் அவர் எழுதிய இலக்கண, இலக்கிய நூல்களைப் படித்தலே தமிழ் மொழியில் தலையாய கல்வி என்கிறாரே அது எப்படி?
தமிழில் வால்மீகி எழுதியுள்ளாரா?